Select Menu

Latest Updates

Latest Updates

Performance

Movie Updates

Other Updates

Videos

» » » » சந்தானத்தின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? - Actor arya
«
Next
Newer Post
»
Previous
Older Post

தி ஷோ பீப்பிள்’ என்ற தனது பட நிறுவனம் சார்பில் ஆர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இது ஆர்யாவுக்கு 25-ஆவது படம்.
நியாயப்படியும்… கதைப்படியும் இந்தப்படத்துக்கு ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க’ என்றே தலைப்பு வைத்திருக்க வேண்டும்.
அந்தளவுக்கு சந்தானம் – ஆர்யா இருவரும் படம் முழுக்க சரக்கடித்துவிட்டு சலம்பும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
அதனாலோ என்னவோ ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற தலைப்பின் தொடர்ச்சியாக ‘ஊரில் உள்ள பாரில் எல்லாம் ஒண்ணா குடிச்சவங்க’ என்று வாய்ஸ் ஓவரையும் வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். எம்.
இந்தப் படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா தன் நண்பேன்டாவான சந்தானம் குறித்து சிலகித்தார்…
‘‘இந்தப்படத்திற்காக சந்தானம் ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகளை பேசி உள்ளார். இயக்குநர் ராஜேஷ் சொல்லும் வசனங்கள் போதுமானதாக இல்லை என்றால், சந்தானம் உடனே அவரது உதவியாளர்களுக்கு ஃபோன் பண்ணி வசனங்களை வரவழைப்பார். இப்படி பஞ்ச் டயலாக்குகள் எழுதிக்கொடுப்பதற்காகவே சந்தானம் ஏ,பி,சி என்று மூன்று டீம்களை வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு டீமிலும் 5 பேர் வீதம் இருக்கிறார்கள். சந்தானம் அவர்களுக்கு ஃபோன் பண்ணினால் போதும்! ஒரு வசனத்திற்கு பதிலாக 3 டீம்களிடமிருந்தும் கிட்டத்தட்ட 15 வசனங்கள் வந்து சேரும். அதிலிருந்து நாங்க பெஸ்ட்டை தேர்ந்தெடுப்போம். இப்படி பிளான் செய்து வொர்க் பண்ணுபவர் சந்தானம். அது தான் அவரது வெற்றிக்கும் காரணம். அந்த வகையில் இப்படத்தின் அனைத்து டயலாக்குகளும், ‘பஞ்ச்’ டயலாக்குகளும் சிறப்பாக வந்துள்ளது’’ என்றார் ஆர்யா.
ஒ… சந்தானத்தின் வெற்றி ரகசியம் இதுதானா?

Source :- Tamil screen 

About Santhanam Actor

Thanks for Visiting Our Website. Keep Visiting Us to Get More Instant Updates of Actor Santhanam. If you have any reports/suggestions about us, please send us your feedbacks at "official.santhanam@gmail.com". Keep Visitng and give your support to us. Thank You...
«
Next
Newer Post
»
Previous
Older Post