தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் ஹீரோவாக ‘சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கபோடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். இதில் ‘சக்கபோடு போடு ராஜா’வை சேதுராமன் இயக்குகிறார்.
சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி நடிக்கிறார். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ‘விடிவி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர் விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் சிலம்பரசன் இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏற்கெனவே ரிலீஸான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘சக்கபோடு போடு ராஜா’-விற்காக சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை சமீபத்தில் பாடினாராம். தற்போது, இசையமைப்பாளரும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
Source :- New flicks.in