‘தில்லுக்கு துட்டு’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சந்தானம் கைவசம் ஆனந்த் பால்கியின் ‘சர்வர் சுந்தரம்’, மணிகண்டனின் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, சேதுராமனின் ‘சக்க போடு போடு ராஜா’, செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’, எம்.ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘சக்க போடு போடு ராஜா’வில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘விடிவி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘கலக்கு மச்சான்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர். அனிருத் பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் டீஸர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source :- NDTV Tamil cinema